கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கெரவலப்பிட்டி சந்திப்புப் பகுதியில் சுங்கச்சாவடி வசூலை இலங்கை அரசு இடைநிறுத்தியுள்ளது.
இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
சந்திப்புப் பகுதியில் கட்டணம் வசூலிப்பது தேவையற்றது என்றும், இது போக்குவரத்து நெரிசலுக்கு பங்களிப்பதாகவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.
எனவே, உச்ச பயண நேரங்களில், சுங்கக் கட்டணத்தை நீக்குவது வாகன சாரதிகளுக்கு 8 முதல் 9 நிமிடங்கள் வரையான நேரத்தை சேமிக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டி சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்களுக்கு இந்த இடைநிறுத்தம் பொருந்தும்.














