லிபிய இராணுவத் தலைமைத் தளபதி மொஹமட் அலி அகமட் அல்-ஹதாத், துருக்கிய தலைநகர் அங்காரா அருகே நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.
அவர் பயணித்த தனியார் ஜெட் விமானம் அங்குள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அவர் தவிர, மேலும் நான்கு லிபிய இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கான காரணம் என்று லிபிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
லிபிய பிரதமர் அப்துல் ஹமீத் டிபீபா, அல்-ஹதாத்தின் மரணத்தை பேஸ்புக்கில் உறுதிப்படுத்தினார்.
மேற்கு லிபியாவின் உயர்மட்ட இராணுவத் தளபதியாக அல்-ஹதாத் இருந்தார்.
மேலும் நீண்டகால ஆட்சியாளர் முயம்மர் கடாபியைக் கவிழ்த்து கொன்ற நேட்டோ ஆதரவு கிளர்ச்சியைத் தொடர்ந்து 2014 முதல் பிளவுபட்டுள்ள நாட்டை ஒன்றிணைக்க ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்துடன் நடந்து வரும் முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.
















