கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரை கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பான கடிதமானது, அக்கட்சியின் பொதுச்செயலாளரான எம்.ஏ சுமந்திரனால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகத்தின் தெரிவித்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடித்தில் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படுவதனால், வறிதாக்கப்படும் உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீட்டிற்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்திருந்த நிலையில், லோகேஸ்வரன் ஆதரவாக வாக்களித்ததையடுத்து இந்த நீக்கம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
வாக்கெடுப்பின் போது குறித்த பாதீடு தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையில் தயாரிக்கப்பட்டது என விமர்சனங்கள் வலுத்திருந்ததாக கூறப்பட்டிருந்தது.















