பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும் நீடித்து, ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று (28) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைக்கு அவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்காக இந்த பொது அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.














