2026 லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது சீசனுக்கான வீரர்கள் தேர்வு முறை எதிர்வரும் மார்ச் 22 அன்று நடைபெறவுள்ளது.
நாட்டின் முதன்மையான உள்நாட்டு டி:20 போட்டியின் வரவிருக்கும் சீசனுக்கான தேர்வு முறையின் போது, உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களை உரிமையாளர்கள் தேர்வு செய்வார்கள் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
லங்கா பிரீமியர் லீக்கின் ஆறாவது சீசன் 2026 ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














