பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருந்த நாடு, படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வரும் வேளையில், டித்வா சூறாவளியின் தாக்கம் ஏற்பட்டு பாரிய அழிவை ஏற்படுத்தியிருந்தபோதும், இந்த அனர்த்தத்தின் மீது பழிகளைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளப்போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார
திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக நாட்டை ஆண்டவர்கள், நாட்டின் வளர்ச்சி தொடர்பாக உள்நாட்டு யுத்ததினை காரணம் காட்டியிருந்தாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வகின்ற ‘rebuilding srilanka ’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று, கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
உயிரிழப்புகள், தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உட்பட இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் பாதித்த டித்வா சூறாவளி, அனர்த்தத்திற்குப் பின்னரான, புனர்வாழ்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உயர் மட்ட, நன்கு ஒருங்கிணைந்த தேசிய மீட்பு பொறிமுறையின் விரைவான மற்றும் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘‘rebuilding srilanka ’ வேலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாட்டின் மீள்கட்டமைப்புத் திட்டத்திற்கு தற்போது மூன்று மூலோபாய அணுகுமுறைகளின் கீழ் நிதியளிக்கப்படுகிறது.
அதன்போது, முக்கியத்துவத்தின் அடிப்படையில் மீள் ஒழுங்கமைப்பு செய்முறையின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களின் நோக்கங்களை மாற்றி செயற்படுத்தல், மறு ஒதுக்கீட்டின் கீழ் நிதி முகாமைத்துவச் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமான தொகையை ஒதுக்குதல் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,
‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தை காரணம் காட்டி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களைப் பின்னோக்கித் தள்ளவோ அல்லது முடக்கவோ ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்படும்.
பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருந்த நாடு, படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்டு வரும் வேளையில்,
இந்தச் சூறாவளியை எதிர்கொள்ள நேரிட்டது.
இருப்பினும், இதன் மூலம் அரசாங்கம் எவ்விதத்திலும் தனது பொறுப்புகளில் இருந்து நழுவிக்கொள்ளப்போவதில்லை.
நாங்கள் தயாரித்துள்ள நிகழ்ச்சி நிரலை கைவிடாமல், இந்த அனர்த்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது
தொடர்பாகத்தான் நாம் ஆராந்து வருகின்றோம்.
தேவை ஏற்பட்டால், இந்த அனர்த்தத்தின் மீது,பல பழிகளைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு எமக்கு இருந்தது.
வரலாற்றில் நாங்கள் அவ்வாறுதான் பயணித்தோம்.
கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து அழிவுகளுக்கும் யுத்தத்தையே காரணமாகக் காட்டினார்கள்.
அவ்வாறான ஒரு நிலையே எமக்கு இருந்தது.
சில தொற்றுநோய் நிலைமைகளை இந்த அழிவுகளுக்கான போர்வையாக மாற்றிக் கொண்டார்கள்.
எமது வேலைத்திட்டத்தைப் பின்னோக்கித் தள்ளவோ அல்லது செயலிழக்கச் செய்யவோ இந்த பேரிடலை அசாங்கம் ஒருபோதும் பயன்படுத்தாது.
டித்வா சூறாவளியினால் 7 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
சுமார் 6 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
சுமார் ஒருலட்சத்து 10 ஆயிரம் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளிப்பதோடு அந்த ஆணைய ஒருபோது அரசியல் செல்வாக்கிற்கு பயன்படுத்தமாட்டோம்.
பேரழிவில் இருந்து மீண்டெழும் செலவுகளுக்காக 500 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக பேரிடர் காலத்தில், வீடுகளுக்குச் சேதம் ஏற்படாத போதிலும், அபாயகரமான நிலை காரணமாக மக்கள் வெளியேற்றப்பட்டடிருந்தனர்.
அவ்வாறு வெளியேற்றப்பட்ட 10 ஆயிரம் வீடுகளையும் நாம் அடையாளம் காண்டுள்ளோம்.














