கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (23) பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, சற்று நேரத்திற்கு முன்பு நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் இந்த உத்ரவினை பிறப்பித்திருந்தார்.
இந்த வழக்கு ரூ. 75 மில்லியனுக்கும் அதிகமம் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது.












