எலான் மாஸ்க்கிற்குச் சொந்தமான எக்ஸ் (X) தளம், தனது Grok AI கருவி மூலம் நிஜ மனிதர்களின் படங்களை தவறாக சித்தரிப்பதைத் தடுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசுகள் இத்தகைய முறையற்ற புகைப்பட உருவாக்கத்திற்கு எதிராகக் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிறுவர்களின் ஆபாசப் படங்கள் பரவுவது குறித்து கலிபோர்னியா மற்றும் பிரிட்டன் அரசுகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
சட்ட விதிகளை மீறினால் அபராதம் அல்லது தடை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கைக்குப் பின்னர் , அனைத்துப் பயனர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தொழில்நுட்பக் கோளாறுகள் மூலம் இத்தகைய படங்கள் உருவாக்கப்பட்டால் அவை உடனடியாகச் சரிசெய்யப்படும் என்று மாஸ்க் உறுதியளித்துள்ளார்.
தனிமனித கண்ணியம் மற்றும் உலகளாவிய சட்ட விதிமுறைகளுக்குக் கீழ்ப்படியும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.












