அண்மையில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட, பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் இன்று (16) அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்ட பெண் ஒருவரும் நாட்டிற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார்.
கல்கிசை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளதாவும் அவர் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பாக தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களைக் கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ் இவர்கள் டுபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்கள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.












