இங்கிலாந்தில் டிக்டாக் தளத்தில் வெளியிடப்பட்ட உயிருக்கு ஆபத்தான சவால்களை முயற்சித்துப்பார்த்து உயிரிழந்த ஐந்து சிறுவர்களின் பெற்றோர்கள், அந்த நிறுவனத்திற்கு எதிராகத் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
குறித்த சிறுவன் சமூக வலைதளங்களில் உலவும் “பிளாக்அவுட் சேலஞ்ச்” எனும் விபரீத விளையாட்டைப் பின்பற்றி முயற்சித்து பார்த்தமையினால் உயிரிழந்ததாக அவர்களின் குடும்பத்தினர் கருதுகின்றனர்.
இதேவேளை, குழந்தைகளின் கைப்பேசித் தரவுகளை மீட்கவும், இந்த உயிரிழப்புகளுக்கு நிறுவனத்தின் பொறுப்பை உறுதிப்படுத்தவும் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு நடைபெறுகிறது.
இத்தகைய ஆபத்தான உள்ளடக்கங்கள் தளம் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக டிக்டாக் தரப்பு வாதிட்டாலும், தகவல் பாதுகாப்பு விதிகளைச் சுட்டிக்காட்டி குழந்தைகளின் தேடல் வரலாற்றைப் பகிர மறுத்துவருகிறது.
இணையத்தில் உள்ள ஆபத்துகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க வலுவான சட்டங்கள் தேவை என்பதை வலியுறுத்தி, இவ்வாறான ஆபத்தான செயற்பாடுகள் மூலம் தங்களின் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் நீதிக்கான போராட்டம் ஒன்றையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.













