ஜனவரி மாத இறுதி மற்றும் பிப்ரவரியில் இங்கிலாந்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, தற்போதைய மிதமான வெப்பநிலை மறைந்து, கிழக்கு திசையிலிருந்து வீசும் கடும் காற்றினால் நாடு முழுவதும் உறைபனிச் சூழல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே வீசிய ‘கோரெட்டி’ புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் போக்குவரத்து பாதிப்புகளைத் தொடர்ந்து, எதிர்வரும் வாரங்களில் பனி சார்ந்த அபாயங்கள் அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை முதல் பரவலாக மழை மற்றும் அடர் மூடுபனி நிலவும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த வானிலை மாற்றம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் என்பதால், அன்றாட இயல்பு வாழ்க்கை மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.













