இங்கிலாந்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டவர் ஆஃப் லண்டன் (Tower of London) பகுதிக்கு அருகில் சீனா தனது மிகப்பெரிய தூதரகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தூதரகத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் சிலர் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு கட்டப்ப்டுள்ள சீன சூப்பர் தூதரகம் இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் அடியில் உள்ள ரகசிய நிலத்தடி அறைகள் மற்றும் நிதித் தரவுகளைக் கடத்தும் கேபிள்களுக்கு அருகில் அமைக்கப்படவுள்ளமையினால் அங்கு உளவு பார்க்கும் திட்டம் இருக்கலாம் என போராட்டக்காரர்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
சீன உளவுத்துறையின் ஊடுருவல் மற்றும் உளவு பார்க்கும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எச்சரித்தும், அந்நாட்டு அரசு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முன்வந்துள்ளது
இந்நிலையில் இதனை கண்டித்தும் எதிரிபு தெரிவித்தும் அப்பகுதியில் பெருமளவான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.












