தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இன்று குறுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நவம்பர் 12 ஆம் திகதி த.வெ.க தலைவர் விஜயிடம் சி.பி.ஐ விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
அதன்படி, கடந்த 12 ஆம் திகதி விசாரணையின் போது, விஜய் அளித்த பதில்களை அடிப்படையாக வைத்து இன்றைய தினம் குறுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இன்று சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணைகள் நடத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விசாரணைக்காக 2ஆவது முறையாக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.சம்பவம் தொடர்பில் பலரிடம் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 12 ஆம் திகதி தவெக தலைவர் விஜய்யிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் குறித்து சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
















