சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 283,300,000 மற்றும் இரண்டு வாகனங்களுடன் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (19) நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் இந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரருடன் சந்தேக நபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அந்த கடத்தல்காரரின் அறிவுறுத்தலின் பேரில் நாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து இந்தப் பணத்தைச் சேகரித்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போதைய விசாரணைகளில், சம்பந்தப்பட்ட வாகனங்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இன்று (20) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இது தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.













