திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக பலங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட இரு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி பிறப்பித்த உத்தரவின் எழுத்துமூல பிரதி மற்றும் குரல் பதிவை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தங்களை விளக்கமறியலில் வைப்பதற்கு எதிராக கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் தாக்கல் செய்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதற்கமைய, இந்த மனுவை மீண்டும் பரிசீலனை செய்வதற்காக இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.















