சீனாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர கனடாவிற்கு எந்த நோக்கமும் இல்லை என்று பிரதமர் மார்க் கார்னி விளக்கமளித்துள்ளார்.
கனடா, சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்குப் பதிலளிக்கும் விதமாக இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடனான தனது சமீபத்திய ஒப்பந்தம், சமீபத்தில் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட சில துறைகளில் மட்டுமே வரிகளைக் குறைத்துள்ளது என்று கார்னி தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், முன் அறிவிப்பு இல்லாமல் சந்தைப் பொருளாதாரம் அல்லாத நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளக்கூடாது என்ற உறுதிமொழிகள் இருப்பதையும் கார்னி சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட சில சிக்கல்களைச் சரிசெய்வதே சீனாவுடன் நாங்கள் செய்துள்ள ஒப்பந்தம் என கார்னி குறிப்பிட்டுள்ளார்.














