அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் காலிறுதிப்போட்டியில் அரினா சபலென்கா வெற்றிப்பெற்று அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிப்பெற்று அசத்தினார்.
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பெப்ரவரி 1-ம் திகதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் இவா ஜோவிக் உடன் பலப்பரீட்சை நடாத்தினார்.
போட்டி தொடங்கியதிலிருந்தே ஆதிக்கம் செலுத்த தொடங்கினார் சபலென்கா இருந்தும் முதல் செட் ஆட்டத்தில் இவா ஜோவிக்கும் தனது திறமையை வெளிக்காட்டினார். இருந்தும் ஆதிக்கத்தை தொடர்ந்த சபலென்கா முதல் செட்டை 6-3 என கைப்பற்றி அசத்தினார்.
இரண்டாவது செட் ஆட்டம் தொடங்கியதும் சபலங்காவின் ஆக்ரோசம் இன்னும் அதிகரித்தது. இம்முறை இவா ஜோவிக்கிற்கு வாய்ப்பினை அவர் வழங்கவே இல்லை இரண்டாவது செட்டடில் அதிரடி காட்டிய சபலென்கா 6-0 என்ற கணக்கில் வெற்றியை தனதாக்கினார்.
இதனால் 6-3.6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிக்கொண்டு அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இரண்டாவது காலிறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ கௌவ்ப் யுக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொள்ளவுள்ளவுள்ளார்.















