இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உள்ள சுமார் ஐந்து மில்லியன் குத்தகைதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில், இங்கிலாந்து அரசாங்கம் ஒரு புதிய சட்டச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய விதிகளின்படி, தற்போதைய நில வாடகை ஆண்டுக்கு அதிகபட்சமாக 250 பவுண்டுகளாகக் குறைக்கப்படும் என்பதுடன், நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இது முற்றிலும் தள்ளுபடடி செய்யப்படும்.
மேலும், புதிய குத்தகை குடியிருப்புகள் கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே உள்ளவர்கள் தங்களைச் சுயமாக நிர்வகிக்கும் நிலைக்கு மாறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிரடி மாற்றங்கள் தற்போதுள்ள நேர்மையற்ற முறையை ஒழித்து, சாதாரண மக்களுக்கு பெரும் நிதியுதவியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்கள் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளன.
இந்நிலையில் இந்த திட்டம் நீண்டகாலமாக நிலவி வந்த வீட்டுவசதிப் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என இங்கிலாந்து அரசாங்கம் கருதுகிறது.













