நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பம் நிராகரிக்கப்பட்டதால் மான்செஸ்டர் மேயர் (Andy Burnham ) ஆண்டி பர்ன்ஹாம் தனது தற்போதைய மேயர் பணிகளில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
அகில உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இங்கிலாந்து தொழிலாளர் கட்சிக்குள் உள்கட்சி மோதல் நிலவி வருகிறது.
மான்செஸ்டர் மேயர் (Andy Burnham ) ஆண்டி பர்ன்ஹாம் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை மறுப்பு தெரிவித்ததால் சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மேயர் பதவியை விடுத்து அவர் போட்டியிடுவது தேவையற்ற தேர்தல் செலவுகளை உருவாக்கும் என கட்சித் தலைவர் கீர் ஸ்டார்மர் தரப்பு தெரிவித்து வருகிறது.
எனினும், பர்ன்ஹாம் கட்சியின் எதிர்காலத் தலைவராக உருவெடுப்பதைத் தடுக்கவே இந்த மறுப்பு தெரிவிக்கப்படுவதாக அதிருப்தியாளர்கள் கருதுகின்றனர்.
இதேவேளை, இந்த முடிவு கட்சிக்குள் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, எதிர்வரும் தேர்தலில் ஏனைய கட்சிகளுக்கு இது சாதகமாக அமையலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
இந்நிலையில் இறுதியில், தனது விருப்பம் நிராகரிக்கப்பட்டதால் மான்செஸ்டர் மேயர் (Andy Burnham ) ஆண்டி பர்ன்ஹாம் தனது தற்போதைய மேயர் பணிகளில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.












