2026 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்படவுள்ளன.
அதன்படி, பயிற்சிப் போட்டிகள் பெப்ரவரி 2 முதல் பெப்ரவரி 06 வரை இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறும்.
2026 பெப்ரவரி 7, அன்று தொடங்கும் டி:20 உலகக் கிண்ணத்துக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளுக்கும் இந்த பயிற்சி ஆட்டங்களானது இறுதி வாய்ப்பாக அமையும்.
பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியானது ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடவுள்ளது.
அதன்படி, அவர்கள் பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பு. எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்வார்கள்.
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டிகளின் நேரம் மற்றும் இடங்கள் கீழே உள்ள அட்டவணையில் உள்ளன:














