தொடர்ந்து நிலவி வரும் எரிபொருள் விநியோகப் பிரச்சனைகள் காரணமாக புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளை நடத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எரிபொருள் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் புதன்கிழமைகளையும் அரசுப் பாடசாலைகளுக்கும் விடுமுறையாக அறிவிக்க அரசு முடிவு செய்திருந்தது.
இது தவிர நீதிமன்றங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்குப் புதன்கிழமை வாராந்திர விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சுகாதாரம், துறைமுகங்கள், குடிநீர் வழங்கல், எரிசக்தி மற்றும் சுங்கம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்பதால், அவற்றுக்கு இந்தச் சிறப்பு விடுமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.












