நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றை (26) தினம் பதிவான வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராதனை, மாலபே, நிக்கவெரட்டிய, களுத்துறை, கோப்பாய் மற்றும் சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
பேராதனை பகுதியில் பாதசாரி மீது கார் மோதியதில் 46 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.
மலாபே பகுதியில் காரொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் 25 வயதுடைய மோட்டார் சைக்கிளின் சாரதி உயிரிழந்தார்.
நிக்கவெரட்டிய பகுதியில் காரொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் 33 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை வடக்கு பகுதியில் சைக்கிள் ஓட்டிச் சென்றவர் மீது முச்சக்கர வண்டி மோதியதில் 59 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
கோப்பாய் பகுதியில் பாதசாரி மீது முச்சக்கர வண்டி மோதியதில் 56 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
சிலாபம் பகுதியில் பாதசாரி ஒருவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார், அவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.












