எதிர்வரும் வாரத்தில் வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வியாழக்கிழமை (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சின் ஆலோசகர் சுமுடு ரத்நாயக்க,
ஜெனரேட்டர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் விவசாய வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கு QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் நிலையங்களில் QR குறியீட்டைக் காண்பிப்பதன் மூலம் அவர்களால் எரிபொருளைப் பெற முடியும்.
மத்திய கிழக்கில் தொடரும் மோதலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து, இலங்கை QR அமைப்பு மூலம் எரிபொருள் வரம்புகளை அறிமுகப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












