ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும் ஆணை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த நீதிப்பேராணை மனுவை, மேலதிக பரிசீலனைக்காக ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதேவேளை , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த மனு விசாரணைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது













