நாடு முழுவதும் நிலவும் கடும் மழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நேற்று (02) இரவு 11.00 மணி முதல் இன்று (03) இரவு 11.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல பகுதிகளுக்கே இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.













