டோம் ஹாலண்டின் புதிய ஸ்பைடர்-மேன் திரைப்படம் சோனி மற்றும் மார்வல் நிறுவனங்களுக்கு ஒரு புதிய மற்றும் சிறப்பான விடியலைக் கொண்டுவந்துள்ளது.
திரைப்படம் வெளியான ஆறு நாட்களிலேயே, உலகம் முழுவதும் 1 பில்லியன் டொலர் வசூலைக் கடந்துள்ளது.
டோம் ஹாலண்ட் ( Tom Holland), ஜெண்டயா (Zendaya) மற்றும் சேடி சிங்க் (Sadie Sink) ஆகியோர் நடித்துள்ள இப்படம், வெளியானதிலிருந்து சமூக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வருவதுடன், தொடர்ந்து சிறப்பான வசூலையும் ஈட்டி வருகிறது.
ஜூலை 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான வெறும் ஆறு நாட்களில், இந்தப் படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் அதிகாரப்பூர்வமாக 1 பில்லியன் டொலர் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது.
இந்த மைல்கல்லின் மூலம், 1 பில்லியன் டொலரை எட்டிய இரண்டாவது அதிவேகத் திரைப்படம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
இருப்பினும், 2019-ல் வெளியான முதல் வார இறுதியில் உலகளவில் 1.2 பில்லியன் டொலர் என்ற பிரம்மாண்டமான வசூலை ஈட்டிய ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தை விட இது பின்தங்கியுள்ளது.
இதில் உள்நாட்டுச் சந்தையில் 407 மில்லியன் டொலரும், சர்வதேசச் சந்தைகளில் 645.8 மில்லியன் டொலரும் அடங்கும்.
எவ்வாறெனினும், ‘Phase 5’ வெளியான ஒவ்வொரு படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியதால் பின்னடைவுகளைச் சந்தித்த மார்வல் நிறுவனத்திற்கு, இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் புள்ளிவிவரங்கள் ஒரு புத்துணர்ச்சியாக அமைந்துள்ளன.














