ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவடைந்த 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில், 11 நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் ஒன்றுகூடியதன் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு ஒற்றுமை குறித்த வலுவான செய்தி விடுக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும் இந்தியாவின் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில், நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான சுமூகமான மற்றும் இணக்கமான உறவை வெளிப்படுத்தும் காட்சிகள் பதிவாகின.
குறிப்பாக, இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான கைகுலுக்கல் மற்றும் மகிழ்ச்சியான உரையாடல் போன்ற முக்கிய தருணங்கள் கமராவில் படம்பிடிக்கப்பட்டன.
பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்காக டெல்லி வந்தடைந்த இந்தியாவின் நீண்டகால நட்பு நாடான ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டின் உடன் பிரதமர் மோடி அன்பான தருணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

எல்லைப் பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் உறவைச் சீரமைக்க முயன்று வரும் சூழலில், 7 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா வந்த சீன ஜனாதிபதி ஜி-க்கும் அதே அளவிலான விருந்தோம்பல் அளிக்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் SCO உச்சி மாநாட்டின் ஓரத்தில் சந்தித்த பின்னர், மோடி, ஜி மற்றும் புட்டின் ஆகியோருக்கு இடையேயான இந்த சந்திப்பு இந்த ஆண்டின் இரண்டாவது சந்திப்பாகும்.
அவர்களின் பிஷ்கெக் சந்திப்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெளிப்படையாக அதிருப்திக்குள்ளாக்கியது.
அவர் அந்த மூன்று தலைவர்களின் சந்திப்பு குறித்து ஒரு நக்கலான கருத்தைப் பதிவிட்டார்.
இந்தியாவையும் ரஷ்யாவையும் ஆழமான, இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம் போல் தெரிகிறது. அவர்கள் இருவரும் இணைந்து நீண்ட காலமும் வளமான எதிர்காலத்தையும் கொண்டிருக்கட்டும் – எனக் குறிப்பிட்டுள்ளார்.














