சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ஞாயிறு (25) அன்றும் பாக்ஸ் ஆபிஸில் தனது சிறப்பான பயணத்தைத் தொடர்ந்தது.
இந்த அதிரடித் திரைப்படம், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் உள்நாட்டு வசூலில் வளர்ச்சியைப் பதிவு செய்ததுடன், உலகளாவிய மொத்த வசூலில் ₹710 கோடி இந்திய ரூபாவையும் கடந்துள்ளது.
வர்த்தகத் தரவுத் தளமான ‘சாக்னில்க்’ (Sacnilk) தகவல்படி, இப்படம் 11 ஆவது நாளில் இந்தியாவில் ₹25.70 கோடி நிகர வசூலைப் (வரிகள் நீங்கலாக) பெற்றுள்ளது.
இது சனிக்கிழமையின் (24) வசூலான ₹24.15 கோடியை விட 6.4 சதவீதம் அதிகம்.
இதன் மூலம், இப்படத்தின் உலகளாவிய மொத்த வசூல் ₹710.35 கோடி இந்திய ரூபாவை எட்டியுள்ளது.
இது இந்த இரண்டாம் பாகத்தை மற்றொரு முக்கிய மைல்கல்லுக்குக் கொண்டு சென்றுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படம், இந்தியாவில் ₹398.70 கோடி நிகர வசூலையும் (net collection), ₹ 466.85 கோடி மொத்த வசூலையும் (gross collection) ஈட்டியுள்ளது.
வெளிநாட்டுச் சந்தைகளிலிருந்து ₹243.50 கோடி கிடைத்துள்ளது; இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் ₹10 கோடி வசூலாகியுள்ளது.
இரண்டாவது வார இறுதியைக் கடந்துள்ள நிலையில், இந்தியாவில் இப்படத்தின் நிகர வசூல் ₹400 கோடி என்ற மைல்கல்லை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த வசூல் வேட்டையின் மூலம், ரஜினிகாந்தின் முந்தைய பிளாக்பஸ்டர் படமான ‘2.0’-ஐ முந்தி, தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக இது உருவெடுத்துள்ளது.
‘ஜெயிலர் 2’ திரைப்படத்துடன், உலகம் முழுவதும் ₹500 கோடிக்கும் மேல் வசூலித்த நான்கு படங்களைக் கொண்ட ஒரே தமிழ் நட்சத்திரமாக சூப்பர் ஸ்டார் உருவெடுத்துள்ளார்.
அந்தப் படங்கள்: ‘2.0’, ‘ஜெயிலர்’, ‘கூலி’ மற்றும் ‘ஜெயிலர் 2’.
மேலும், உலகம் முழுவதும் ₹600 கோடிக்கும் மேல் வசூலித்த மூன்று படங்களைக் கொண்ட ஒரே தமிழ் நட்சத்திரமாகவும் ரஜினிகாந்த் திகழ்கிறார்.
‘2.0’, ‘ஜெயிலர்’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்கள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளன.
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு தமிழ் நடிகர் விஜய் ஆவார்.
இவரது ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ₹600 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
ஜெயிலர் 2 ஓடிடி (OTT) வெளியீடு
‘ஜெயிலர் 2’ (Jailer 2) திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 12 அன்று டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இது ‘அமேசான் பிரைம் வீடியோ’ (Amazon Prime Video) தளத்தில் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தகவல் உண்மையானால், திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்கத் தவறியவர்கள், ரஜினிகாந்தின் இந்தப் புதிய படைப்பைத் தங்கள் வீட்டிலிருந்தே பார்க்கும் வாய்ப்பைப் பெறலாம்.
தற்போதைய நிலவரப்படி, இது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் கிடைக்கவில்லை.

















