எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று தீர்மானித்துள்ளது.
அந்த சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று கூடியதன் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இணைந்து கொள்வதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காகவே இந்த விசேட கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
MOSTREAD
















