உலகக் கிண்ண போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டித் தொடருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகள் வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான கிரிக்கெட் அணிகளை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம் :
பாஃப் டூ பிளசிஸ் (அணித்தலைவர்)
ஹாசிம் அம்லா
குயின்றன் டி ஹொக் (விக்கெட் காப்பாளர்)
ஜெ.பி. டுமினி
ஐடென் மார்க்ராம்
டேவிட் மில்லர்
லுங்கி நிகிடி
அன்ரிச் நோர்ட்ச்
அன்டைல் பெஹ்லுக்வாயோ
டிவைன் பிரிடோரியஸ்
கஜிசோ ரபாடா
ரப்ராய்ஸ் ஷம்சி
டேல் ஸ்டின்
இம்ரான் தஹிர்
ரஸ்ஸி வேன் டெர் டஸ்ஸென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அணியில் ரபாடா, நிகிடி மற்றும் ஸ்டின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள் என்பதால், தென்னாப்பிரிக்க அணியிடம் விளையாடும் அணிகள், துடுப்பெடுத்தாடுவது கடினமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் துடுப்பாட்டத்திலும் டூ பிளசிஸ், அம்லா மற்றும் ஜெ.பி.டுமினி ஆகியோர் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.