நைஜீரியாவில், கனமழையால் பலத்த சேதமடைந்த சிறைச்சாலை ஒன்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
சுலேஜா நகரில், தொடர்ந்து பல மணி நேரம் பெய்த கனமழையால் சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் ஒரு பகுதியும், சில கட்டடங்களும் இடிந்து விழுந்தன.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 119 சிறைக் கைதிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவர்களில் 10 பேரை மீண்டும் கைது செய்த நைஜீரிய பொலிஸார், எஞ்சியவர்களை உளவுத்துறை உதவியுடன் தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




















