ரஷ்யாவுக்காக உளவு பார்த்த உக்ரைன் நாட்டு தம்பதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் இராணுவ நிலைகள் குறித்து தகவல் அளிப்போருக்கு வெகுமதி வழங்குவதாக ரஷ்ய உளவுத்துறை டெலிகிராம் சேனலில் விளம்பரம் கொடுத்துள்ளது.
இந்த விளம்பரத்தை பார்த்து குறித்த உக்ரேன் தம்பதியினர் விலைபோனதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதன்படி, உக்ரேன் நாட்டைச் சேர்ந்த குறித்த இருவரும், ரஷ்ய ரஷ்ய இராணுவத்துக்கு வழங்கிய தகலுக்கமைய, கெர்சன் நகரில், உக்ரைன் வீரர்கள் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் துல்லியமாக பீரங்கி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.