மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விண்வெளி சுற்றுலாப் பயணம்: ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு!

மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விண்வெளி வீரர்கள் அல்லாத மனிதர்கள் பங்கேற்கும் விண்வெளி சுற்றுலாத் திட்டம் தொடர்பான அறிவிப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ்-ன் டிராகன் குறுங்கலத்தில், அனுபவம் வாய்ந்த பைலட் ஜாரெட் ஐசக்மேன் தலைமையில் 4 நபர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் பூமியை சுற்றி வருவார்கள்.
இன்ஸ்பிரேஷன் 4 என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் பணவசூல், குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்கு வழங்கப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.
விண்வெளிக்கு செல்லும் இந்த 4 பேருக்கும் பால்கன் ரொக்கெட் மற்றும் டிராகன் குறுங்கலத்தில் தேவையான பயிற்சியும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.