சூடானில் பசி, பட்டினியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது.
இந்த போர் தற்போது வரை நீடிப்பதுடன் இதனால், விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையில், உணவுப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதால், விவசாயிகள் பயிர்ச் செய்கைக்காக கொள்வனவு செய்த விதைகளை உண்ணுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், மக்கள் உயிர் வாழ்வதற்காக மண் மற்றும் இலைகளை உண்ணும் அவல நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.