ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு ஜோர்ஜியாவில் இன்று ஆரம்பமாகின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை ஜோர்ஜிய தலைநகர் டிபிலிசியில் இடம்பெறவுள்ளது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஜோர்ஜியா சென்றுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுப்பினரான இலங்கை தனது நிதி வசதிகள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு ஏனைய உறுப்பு நாடுகளுடன் கூட்டுறவை ஏற்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.