பிரான்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 1.86 மில்லியனை எட்டியுள்ளது.
அத்தோடு 2 இலட்சத்து 47 ஆயிரத்து 260 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 273,600 டோஸ் அஸ்ட்ராஜெனகா உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை பிரான்ஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவற்றில் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்காக கொரோனா தடுப்பூசியை வழங்கும் செயற்பாடுகள் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியின் இரண்டாவது தொகுதியான 304,800 டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.