பிபிசி உலக செய்தி சேவைக்கு தடை விதித்துள்ள சீன அரசாங்கத்தின் செயலை பிரித்தானியா கடுமையாக கண்டித்துள்ளது.
‘ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கை ஏற்க முடியாதது’ வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சீனாவின் நடவடிக்கை ஏற்க முடியாதது. உலகெங்கிலும் உள்ள ஊடகங்கள் மற்றும் இணைய சுதந்திரத்திற்கு சீனா மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த சமீபத்திய நடவடிக்கையானது, உலகின் பார்வையில் சீனாவின் நற்பெயரை பாதிக்கும்’ என கூறினார்.
கொரோனா வைரஸ் மற்றும் வீகர் இனவாத சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான பிபிசியின் ஊடக ஒளிபரப்பு குறித்து ஆத்திரமடைந்திருந்த சீனா, பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.