பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆட்டநேர முடிவில், மொஹமட் மிதுன் 6 ஓட்டங்களுடனும் முஷ்பிகுர் ரஹீம் 27 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், பங்களாதேஷ் அணி, 304 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
டாக்கா மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 409 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், ஜோசுவா டா சில்வா 92 ஓட்டங்களையும், போனர் 90 ஓட்டங்களையும் அல்சார்ரி ஜோசப் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அபு ஜெயிட் மற்றும் தைஜூல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் மெயிடி ஹசன் மற்றும் சௌமியா சர்கார் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொங்கிய பங்களாதேஷ் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பங்களாதேஷ் அணி சார்பில், டமீம் இக்பால் 44 ஓட்டங்களுடனும் சௌமியா சர்கார் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், நஜ்முல் ஹொசைன் சாந்தோ 4 ஓட்டங்களுடனும் மொமினுல் ஹக் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், செனோன் கெப்ரியல் 2 விக்கெட்டுகளையும் ராகீம் கோர்ன்வோல் மற்றும் அல்சார்ரி ஜோசப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாவது நாளை பங்களாதேஷ் அணி நாளை தொடரவுள்ளது.