ஃபைசர் மற்றும் மொடர்னா நிறுவனங்களின் 200 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி அளவை பெறும் ஒப்பந்தத்தை அமெரிக்கா இறுதிசெய்துள்ளது.
இது கிட்டத்தட்ட ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தேசிய சுகாதார நிறுவனங்களுக்கான விஜயத்தின் போது, நேற்று (வியாழக்கிழமை) இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இதில் ஃபைசர் நிறுவனத்தின் 100 மில்லியன் டோஸ் அளவும் மொடர்னா நிறுவனத்தின் 100 மில்லியன் டோஸ் அளவும் இதில் அடங்கும்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் போது உத்தரவிடப்பட்ட 400 மில்லியனுக்கும் மேலான கூடுதல் அளவுகளைப் பெற மத்திய அராங்கத்துக்கு அறிவுறுத்துவதாக பைடன் கடந்த மாதம் கூறினார்.
புதிய ஒழுங்கு நடைமுறையில், அமெரிக்கா 300 மில்லியன் மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு போதுமான விநியோகத்தைக் கொண்டிருக்கும் என அவர் மேலும் கூறினார்.
ஆரம்பத்தில் திட்டமிட்டதை விட ஒரு மாதம் விரைவில், மே மாத இறுதிக்குள் ஃபைஸரும் மொடர்னாவும் தலா 100 மில்லியன் டோஸை வழங்குவதற்காக உற்பத்தியை விரைவுபடுத்துகின்றன என்று பைடன் தெரிவித்தார்.