அவுஸ்ரேலியாவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு குறித்த முடக்க செயற்பாடுகள் அமுலில் இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் தொற்று உறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் முடக்க செயற்பாடுகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்தோடு எதிர்வரும் புதன்கிழமை வரை மெல்போர்னுக்கான அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் நிறுத்த பிரதமர் ஸ்கொட் மொரிசன் தீர்மானித்துள்ளதாக மாநில முதல்வர் ஆண்ட்ரூஸ் கூறினார்.