ரஷ்ய – அமெரிக்க உறவுகள் மேலும் மோசம் அடைவதற்கான பொறுப்பு அமெரிக்காவிடம் தான் முழுமையாக உள்ளது என ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலெக்சி நவால்னியை விடுவிக்க வேண்டும் மற்றும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான விவகாரங்களில் இருநாடுகளுக்கும் இடையே உறவில் விரிசல் விழுந்துள்ளது.
அத்துடன் தேர்தல் தலையீடு விவகாரத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அதற்கான விலையை கொடுப்பார் எனவும் அவர் ஒரு கொலையாளி எனவும் அமெரிக்க ஜனாதிபதி பைடன் விமர்சனம் செய்திருந்தார். இந்த பின்னணியில் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இதனிடையே வொஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ்வை நாடு திரும்ப ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவுடனான உறவுகளின் பின்னணியில் என்ன செய்ய வேண்டும் என்பதை பகுப்பாய்வு செய்யும் நோக்கத்துடன் ஆலோசனை நடத்துவதற்காக ரஷ்ய தூதர் மாஸ்கோவுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.