அ.தி.மு.க. அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வியாழக்கிழமை) பிரசாரம் மேற்கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை பட்டியலிட்டுப் உரையாற்றிய அவர், தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறிய அ.தி.மு.க. அரசு அதற்கான நிதியை முழுமையாக ஒதுக்கவில்லை எனவும் சாடினார்.
ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அதை நிறைவேற்றும் எனவும் உறுதியளித்தார்.