ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையினை, நான்கு ஐரோப்பிய நாடுகள் விலக்கிக் கொண்டுள்ளன.
இந்தநிலையில், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள், அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை மீண்டும் மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கியுள்ளன.
முன்னதாக அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு இரத்த உறைவு ஏற்படுவதாக புகார் எழுந்ததையடுத்து பல்வேறு ஐரோப்பிய நாடுகள், தடுப்பூசி செலுத்தும் பணியினை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன.
எனினும், உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையம் ஆகிய அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியால் இரத்த உறைவு ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என கூறி வந்தன.