ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) இந்திய அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விடயம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதை உறுதிப்படுத்துமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.
இந்த நிலையிலேயே இந்த விடயத்தில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு, இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிக்கொடுக்கும் எந்த முயற்சியையும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் மோடியை எச்சரித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியிருந்தார்.
இதன்போது, இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் இரு நாடுகளுக்கிடையேயான தொடர்ச்சியான முன்னேற்றங்கள் மற்றும் தற்போதைய ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.