மெக்ஸிகன் பகிரங்க டென்னிஸ் தொடரில், ஜேர்மனியில் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாசுடன் மோதினார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், முதல் செட்டை 6-4 என போராடிக் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஸ்டெபீனோஸ் ஸிட்ஸிபாஸ் பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடினார்.
இதனால் தீர்க்கமான இரண்டாவது செட் பரபரப்படைந்தது. டை பிரேக் வரை நகர்ந்த இந்த செட்டில் 7-6 என அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், போராடி வெற்றிபெற்றார்.
மெக்ஸிகன் பகிரங்க டென்னிஸ் தொடரில், அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் பெறும் முதல் சம்பியன் பட்டம் இதுவாகும். முன்னதாக, 2019ஆம் ஆண்டு இறுதிப் போட்டி முன்னேறியிருந்தார்.