ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி வழங்கியதையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழ் மக்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாம் என இலங்கை நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இதுவரையில் இந்தியாவின் நிலைப்பாடு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.