இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் பிரித்தானியாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் சார்பாக குறித்த பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கும், கடந்தகாலங்களில் இடம்பெற்ற கடுமையான மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதாக ஜூலியன் ப்ரைத்வைட் கூறினார்.
இந்நிலையில் ஒருமித்த கருத்து மூலம் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற பரீட்சார்த்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கெடுக்கவில்லை