இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செயல்முறையை முன்னெடுத்துச் செல்லவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் அனைத்து மக்களின் அடிப்படை சுதந்திரங்களும் மனித உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து ஆக்கபூர்வமாக ஈடுபட வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்து இந்தியா மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது.
இதேவேளை தமிழர்களின் பிரச்சினையை ஆதரிக்கும் அதேநேரம் இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.