ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையில் வாக்களிக்காத இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை இலங்கை அரசாங்கம் பாராட்டியுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான 46/1 தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், லிபியா மற்றும் சூடான் ஆகிய 14 நாடுகளின் ஆதரவிற்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 11 நாடுகளின் உறுதியான ஆதரவிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.