கொரோனா விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகள் மூலமாகவே கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது.
மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா விழிப்புணர்வுக்கு ஒத்துழைப்பு அளித்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.